சாரல் இலக்கிய விருது 2012

யானை – வண்ணநிலவன் – தேர் – வண்ணதாசன் / எஸ். ராமகிருஷ்ணன் பேச்சு
ஜனவரி – 7, சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவ நேயப்பாவணர் அரங்கத்தில் விளம்பரப்பட உலகின் முன்னனி இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரியின் தந்தையரின் நினைவாக ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் சாரல் விருது இவ்வருடம் எழுத்துலகின் முன்னனி எழுத்தாளர்களான திரு. வண்ணநிலவன் மற்றும் திரு. வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருது சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி அவர்களால் உருவாக்கப்பட்ட கலைநயமிக்க விருது சிற்பமும் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் அடங்கியது.
எழுத்தாளர் திரு. வண்ணநிலவனின் “எதையேனும் சார்ந்திரு” பாடலோடு விழாவை திரு. ரவிசுப்ரமணியன் அவர்கள் தொடங்கினார்.















